
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். அந்த வகையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் நேற்று பௌர்ணமி இரவு என்பதால் பக்தர்கள் கோவிலுக்கு அதிகமாக வந்தனர்.
அப்போது திடீரென கடல் 60 அடி தூரம் வரை உள்வாங்கியது. இதனால் பாசிகள் படர்ந்த பாறைகள் வெளியில் தெரிந்த நிலையில் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதோடு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயமின்றி புனித நீராடி சென்றனர். மேலும் திருச்செந்தூரில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்குவது வழக்கமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.