
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு தனியார் பள்ளியில் பிரம்மாண்ட பொருட்காட்சி விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது ராட்டினத்தில் பலர் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தபோது திடீரென கவுசல்யா (22) என்ற பெண் தவறி கீழே விழுந்தார். உடனடியாக இருந்த ஊழியர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.