உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த விஜய் தனது மனைவியை கொன்றுவிட்டார்.

பின்னர் அருகிலிருந்த ஒரு வயலில் புதைத்து விட்டு மறுநாள் காலை எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக இருந்தார். அப்போது வீட்டில் ரேகா இல்லாததை அறிந்த அவருடைய தந்தை விஜயிடம் கேட்டபோது அவர் தான் ரேகாவை கொலை செய்ததை கூறினார். இதனைக் கேட்ட அவரது தம்பி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் துறையினர் விஜயை கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில் அவருக்கு  ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்பு  இருந்ததாகவும், அதனை மனைவி ரேகா எதிர்த்த போது கோபத்தில் அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ரேகாவின் தந்தை விஜய் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் விஜயின் குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.