
ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஷகிலா. இவர் தற்போது youtube சேனலில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சிறகடிக்க ஆசை நடிகையை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது சிறகடிக்க ஆசை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக இருக்கும் பெண் ஒருவரின் அரை நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் நடிகை whatsapp வீடியோ கால் மூலம் ஒரு நபருடன் பேசுவதாக காணப்படுகிறது.
அதோடு அந்த நபர் கூறும் அனைத்து விஷயங்களையும் அந்த நடிகை செய்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் “அட்ஜஸ்மென்ட் பிரச்சனையில் நடிகை சிக்கியதால் இவ்வாறு செய்திருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வைரலான வீடியோவால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை “இந்த வீடியோவில் இருப்பது நானல்ல, இது ஒரு ஏஐ வீடியோ” என்று கூறினார். இந்நிலையில் நடிகை ஷகிலா அந்த வீடியோ ஏ ஐ வீடியோ இல்லை என்று கூறி அந்தப் பெண் பட வாய்ப்பிற்காக இவ்வாறு செய்ததாக கூறினார்.
அந்தப் பெண்ணை இவ்வாறு செய்ய வைத்த அந்த நபர் தான் உண்மையான குற்றவாளி என்று கூறினார். இதைத்தொடர்ந்து அந்த பெண் இதனை தவிர்த்து இருக்கலாம் என்றும், தன்னை இவ்வாறு செய்ய வைத்த நபர் மீது புகார் கொடுத்திருக்கலாம் என்று அவர் கூறினார். மேலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.