சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மின் ரிக்ஷா ஓட்டுநருக்கும், காரின் உரிமையாளருக்கும் இடையே நடந்த சம்பவம் சினிமா காட்சியைப் போல காணப்பட்டது. அதாவது ஒரு சாலையில் மின் ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தபோது அதன் பின்னால் மகேந்திரா சைலோ கார் ஒன்று வந்தது. இந்நிலையில் ரிக்ஷா ஓட்டுநர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி கார் ஓட்டுநரிடம் தகராறு செய்தார். அப்போது கோபத்தில் அவர் தனது ஆட்டோவில் இருந்த கம்பியை எடுத்து கார் ஓட்டுநரை மிரட்டி கத்திக்கொண்டு காரின் முன் பக்கத்தை தட்டி பேசினார்.

அந்த சமயத்தில் காரின் ஓட்டுனர் துப்பாக்கியை எடுத்து கொண்டு காரில் இருந்து இறங்கினார். அவர் கையில் இருந்தது துப்பாக்கியை பார்த்ததும் தகராறு செய்து கொண்டிருந்த ரிக்ஷா ஓட்டுநர் பயந்து ஓடிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் துப்பாக்கியுடன் ஒருவர் சாதாரணமாக இருப்பது அதிர்ச்சி தருவதாக கூறியுள்ளனர். இன்னும் சிலர் இது “ஸ்கிரிப்ட் பண்ணப்பட்ட ட்ராமா” என்று சந்தேகத்துடன் பதிவிட்டுள்ளனர். மேலும் ஒருவர் “இது 100% நடித்தது போல தான் இருக்கு.. ஆனா சற்று நன்றாகவே நடித்திருக்கிறார்கள்” என கூறிய நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.