
வேலூர் மாவட்டத்தில் உள்ள எடைத்தெரு கிராமத்தில் முருகன்-செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய இளைய மகள் ஷாலினிக்கு 17 வயதாகும் நிலையில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தற்போது பொது தேர்வு எழுதி முடித்த நிலையில் சம்பவ நாளில் வீட்டில் துணி துவைத்துக்கொண்டு பின்னர் காய போடுவதற்காக சென்றார்.
அப்போது அங்கு செடியில் மறைந்திருந்த ஒரு விஷப்பாம்பு சிறுமியின் காலில் கடித்துவிட்டது. உடனடியாக சிறுமியைப் பெற்றோர் அருகிலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு முதலுதவி வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.