
நடிகை ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு ரம்யா பாண்டியன் நடிப்பில் ரிலீசான ஜோக்கர், ஆண் தேவதை, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்கள் மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. சின்னத்திரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் நான்காவது சீசன் மேலும் ரம்யா பாண்டியன் பங்கேற்றார்.
கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திருமணம் என்றாலே பெண் வீட்டில் இருந்து தான் வரதட்சனை கொடுப்பார்கள்.
ஆனால் ரம்யா பாண்டியனுக்கு மாப்பிள்ளை வீட்டார் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நகைகள் வாங்கிக் கொள்ள சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் செலவு மிச்சமாகிவிட்டதாக ரம்யா பாண்டியனின் தாய் ஒரு பேட்டியில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்