அழுகிய நிலையில் திமுக உறுப்பினரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திமுக முன்னாள் வார்டு உறுப்பினர் ஆறுமுகம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏப்.12-ஆம் தேதி அவர், காணாமல் போனதாக குடும்பத்தார் புகாரளித்த நிலையில், அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆறுமுகத்தை யாராவது கொலை செய்தார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.