ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் ஞானேஸ்வர் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அனுஷா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அனுஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு 24 மணி நேரத்தில் குழந்தை பிறப்பதாக இருந்தது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் ஞானேஸ்வர் ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் ஞானேஸ்வர் தனக்கு கேன்சர் இருப்பதால் அனுஷாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ள நிலையில் அதற்கான அனுஷா மறுப்பு தெரிவித்து நாம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்று கூறியுள்ளார்.

அதோடு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் நீ வேறொரு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ஞானேஸ்வர் சம்பவ நாளில் இரவு தன்னுடைய மனைவியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த நிலையில் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இந்த தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனுஷா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் ஞானேஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.