குளித்தலை தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி காலமானார். திமுகவை அண்ணா ஆரம்பித்த காலத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர் கந்தசாமி. கடந்த 1967-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு கந்தசாமி வெற்றி பெற்றார்.

இதனையடுத்து 1971-ஆம் ஆண்டு தேர்தலில் அவர் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த சாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.