மகாராஷ்டிராவின் புனே நகரம் தையாரி பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ ஜுவல்லர்ஸ்” நகைக்கடையில், மூன்று மர்ம நபர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, பிளாஸ்டிக் துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியர்களை மிரட்டி, சுமார் 20 முதல் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் விஷ்ணு டாஹிவால் என்பவருக்கு சொந்தமான இந்த கடையில் குற்றவாளிகள் நுழைந்து வேகமாக செயல்பட்டனர்.

 

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவத்திற்கு பிறகு குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் கடையை விட்டு தப்பிச் சென்றதும் மற்றொரு சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணையில் குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. தற்போது அந்த மூன்று கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.