
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு தாயார் தன்னுடைய மகளை அவரது காதலனுடன் (Boyfriend) பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பிடித்து வைத்து, “போன் ஸ்பீக்கரில் வை!” என்று கட்டளையிடுகிறார். மகள் தயக்கத்துடன் ஸ்பீக்கர் வைத்தவுடன், மறுபுறம் இருந்த காதலன் “சாப்பிட்டியா?” என கேட்க, அதைக் கேட்ட தாய் ஒரே கோபத்தில் வெடித்துவிடுகிறார்.
வீடியோவில், “சாப்பிட்டியா? என்கிறே… நீயே வந்து சாப்பாடு வைச்சு கொடு!” எனக் கடும் கோபத்துடன் அந்த பையனை திட்டுகிறார். அந்த சத்தம் கேட்டவுடன் மறுபுறம் இருந்த பையனும் அச்சத்துடன் மெளனமாகிப் போகிறார். இதையடுத்து தாயின் கோபம் தலைக்கேறி, தனது மகளை கோபத்தில் அடிக்கிறார். அந்த வீடியோவில், தாயின் கவலை, கோபம், மற்றும் தனது மகளை தவறான பாதையில் செல்ல விடக்கூடாது என்ற எதிரொலி தெளிவாகத் தெரிகிறது.
இந்த வீடியோ “@adultsutra” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டதுடன், இது தற்போது வைரலாகி பல லட்சக்கணக்கான பார்வைகளையும் கருத்துகளையும் பெற்றுள்ளது. “இளம் தலைமுறை வழி தவறாமல் இருக்க பெற்றோர் எவ்வளவு கவலையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் சிறந்த உதாரணம் இது” என சிலர் புகழ்ந்துள்ளனர். மற்றொரு பக்கம், சிலர் “அடிதான் தீர்வா?” என விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ளனர். குழந்தைகளுக்கு நேர்மைத் தொடர்புகள் குறித்த புரிதலை பெற்றோர்கள் உரையாடலின் மூலம் கொடுக்கவேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.