
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் அனுஷ்கடு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவர் நேற்று முன்தினம் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிலர் இவரை வழிமறித்தனர்.
அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்டு ஆயுதங்களால் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை பட்ட பகலில் மக்கள் மிகுந்த பகுதியில் நடந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.