சீனாவின் ஷாங்காயில் அமைக்கப்பட்டுள்ள புதிய வகை ATM இயந்திரம் தற்போது உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது சாதாரண ATM அல்ல தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளை உள்ளே போட்டு, அதை நேரடியாக உருக்கி, அதன் தூய்மை மற்றும் எடையை கணக்கிட்டு, அதற்கேற்ப உள்ள மதிப்பை உங்கள் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்தும் அதிநவீன வசதி கொண்டது.

 

இந்த ATM இயந்திரம் பற்றிய வீடியோவை முதன்முதலில் டர்கிஷ் தொழில்நுட்ப நிபுணர் தன்சு யெகன் X-இல் பகிர, உலகம் முழுவதும் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ATM மூலம் தங்கம் போன்றவற்றை நேரடியாக நவீன டிஜிட்டல் பைனான்ஸ் வசதிகளுடன் இணைக்கும் முயற்சியை சீனா எடுத்துள்ளது.

“தங்கம் போடுங்க – பணம் எடுங்க” என கூடியவேகத்தில் பண பரிவர்த்தனையை முடிக்கும் இந்த புதிய கண்டுபிடிப்பு, பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், பலரும் “நம்ம நாட்களிலும் இப்படியொரு ATM வருமா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இது போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எதிர்கால பண பரிவர்த்தனையின் போக்கை மாற்றக்கூடிய சக்தியை கொண்டிருக்கின்றன என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.