கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 33 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய தாயார் வீட்டிற்கு அடிக்கடி ஒரு தனியார் பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்போது அந்த பேருந்து நடத்துனர் வீரபத்திர சாமி என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ள உறவாக மாறியது.

இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தன்னுடைய வீட்டிற்கு அவரை அழைத்து உல்லாசமாக இருக்க ஆரம்பித்தார். இதனை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீரபத்திர சாமி தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த பெண்ணின் வீட்டில் வீட்டு வேலை நடந்த போது அங்கு வேலைக்கு வந்த ஒரு வாலிபருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டதாக வீரபத்திர சாமி சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவர் அந்த பெண்ணுடன் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் அந்த பெண் அவரிடம் இருந்து விலகியதோடு தன்னுடைய செல்போன் நம்பரையும் மாற்றிவிட்டார்.

இதனால் வீரபத்திர சாமி தன்னுடன் தொடர்ந்து கள்ள உறவில் இருக்க வேண்டும் எனவும் உறவை கைவிட்டால் இருவரும் ஆபாசமாக இருக்கும் வீடியோவை கணவர் மற்றும் உன் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது வீரபத்திர சாமிக்கு தெரிய வந்ததால் அவர் அந்த பெண்ணின் ஆபாச வீடியோக்களை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதனால் வீரபத்திரசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.