தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லூர்தம்மாள் புரம் பகுதியில் சகாயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரடேனா (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பலில் மாலுமியாக இருந்த நிலையில், திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் ஈஸ்டர் பண்டிகைக்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக தன் வீட்டிற்கு விடுமுறையில் வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தன் வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த ரெக்சன் மற்றும் மதன்குமார் ஆகிய மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் பைக்கில் வேகமாக சென்ற நிலையில் அவர்களை மரடேனா சத்தம் போட்டுள்ளார். இதில் கோபமடைந்த மதன்குமார் உள்ளிட்டவர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மதன்குமார் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.