நாடெங்கிலும் 500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம், நிதி புலனாய்வு இயக்ககம், வருவாய் புலனாய்வு, சிபிஐ, என்ஐஏ, பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் போன்ற பல முக்கிய அமைப்புகளுக்கு இன்டர்னல் கம்யூனிகேஷன் மூலம் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. கள்ள நோட்டுகள் பார்ப்பதற்கு உண்மையான ரூபாய் நோட்டுகளுடன் சிறிதும் வித்தியாசமில்லாத நிலையில், அதை கண்டறிவது கடினமாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளில், “Reserve Bank of India” என்ற வார்த்தையில் “E” என்ற எழுத்துக்கு பதிலாக தவறுதலாக “A” பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க பிழையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை நோக்கி நிதி பரிவர்த்தனை செய்யும் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சிறிய பிழையைப் பயன்படுத்தி போலி நோட்டுகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.