தமிழகத்தில் பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைய இருக்கிறது. ஆனால் இதற்கு பரந்தூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது விமான நிலையம் அமைக்க மத்திய அரசிடம் கேட்டபோது பரந்தூரை தான் தேர்வு செய்திருந்தது.

ஆனால் பொதுமக்கள் ஆயிரம் நாட்களைத் தாண்டி போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அங்கு விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் ஆரம்பம் முதலே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதன்பிறகு பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக அவர் நேரில் சென்று அவர்களை சந்தித்ததோடு கண்டிப்பாக விமான நிலையம் அமையாது என்றும் அதற்கு வேண்டிய அனைத்து சட்ட போராட்டங்களையும் மேற்கொள்ள நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக ஒரு எக்ஸ் தள பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக 1000 நாட்களைத் தாண்டி அறப்போராட்டம் நடத்தி வரும் என் பாசத்திற்கு உரிய பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள் நாளை நமதே என்று பதிவிட்டுள்ளார். மேலும் விஜய் நாளை நமதே என்று பரந்தூர் மக்களுக்காக பதிவு போட்டது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.