
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவருடைய மறைவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அமைதியை நிலைநாட்ட விரும்புபவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போப் ஆண்டவர் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்திலும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவை முன்னிட்டு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தற்போது அரசு அறிவித்துள்ளது.