
சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி மண்டலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. லீ என்ற மனைவி, தனது கணவன், வேறு ஒரு பெண்ணான காமுகியுடன் ஒரு குடியிருப்பில் தங்கியிருப்பதை சந்தேகித்து, அந்த வீட்டில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி வீடியோ பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் இருந்த தனிப்பட்ட தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்த காமுகி வாங், தனிமனித உரிமை மற்றும் கெளரவம் பாதிக்கப்பட்டதாகக் கூறி போலீசில் புகார் அளித்தார். பின்னர் லீ மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, வீடியோவை நீக்க வேண்டும், மன்னிப்புக் கோர வேண்டும், மன உளைச்சலுக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் லீ தனது கணவனின் துரோகத்தை அம்பலப்படுத்தவே வீடியோ வெளியிட்டதாகவும், இது குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சி எனவும் விளக்கம் அளித்தார். இதை விசாரித்த தெங் கவுண்டி நீதிமன்றம், லீ தனியுரிமையை மீறி தவறு செய்துள்ளார் என உறுதி செய்தது.
ஆனால் வாங் கோரிய இழப்பீடும், மன்னிப்பும் வழங்க முடியாது என்று கூறியது. காரணமாக, வாங் ஒரு தவறான உறவில் இருந்ததாலும், அவர் கோரிய மன அழுத்தத்திற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த சம்பவம் சமுதாய ஒழுக்கத்திற்கு எதிரானதாகவும், முரணானதாகவும் உள்ளது.
வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டபோதும், வூழோ நகர இடைநிலைக் நீதிமன்றம் தாழ்நிலை நீதிமன்றத்தின் தீர்ப்பைவே ஒப்புக் கொண்டு உறுதி செய்துள்ளது. லீ வழிகாட்டிய வீதியில் பலர் தான் எதிர்கொள்ளும் சமூக உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக சிலர் பாராட்டினாலும், சட்டப்பாதுகாப்பு என்பது எப்போதும் உறுதியான நெறிமுறைகளில் அமைய வேண்டும் என்பதே இந்த தீர்ப்பின் முக்கியமான நோக்கம்.