
AI தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் நுழைந்து மக்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் குறைந்த செலவில், AI நல்ல தீர்வை கொடுப்பதால் பெரும்பாலும் இதனை ஆதரிக்கின்றனர். இந்நிலையில் தற்போது AI தொழில்நுட்பம் இன்டீரியர் டிசைனர் துறையிலும் நுழைந்து விட்டது.
அதாவது பெண் தொழிலதிபர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காமியா குப்தா என்ற பெண் தனது அறைக்கு புதிய இன்டீரியர் டிசைன் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு AI நாடியுள்ளார். அதன்படி அறைக்குத் தேவையான சித்திரங்கள், பெயிண்ட், எந்த இடத்தில் எந்த பொருளை வைக்க வேண்டும் என்பதை குறித்து ChatGBT- யிடம் உரையாடினார்.
View this post on Instagram
அப்போது ChatGBT கொடுத்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு பைசா கூட செலவில்லாமல் தற்போது நான் இன்டீரியர் டிசைனர் பணியை எப்படி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் அருமையான டிசைனர் ஐடியாவை ChatGBT உங்களுக்கு கொடுத்து இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த அனுபவம் எனக்கு மிகவும் புதுசாக இருந்தது. என்னுடைய மனதில் பல ஆண்டுகளாக நினைத்து இருந்த விஷயம் தற்போது ஒரு உரையாடலால் நினைவாகிவிட்டது. நான் இதன் மூலம் ஒரு நல்ல விஷயத்தை கற்றுக் கொண்டேன் என்று காமியா குப்தா தெரிவித்தார். இந்த டெக்னாலஜிக்கு நன்றி கூறும் அதே நேரத்தில் ஒரு சின்ன பயமும் என் மனதில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.