திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு தங்களது சொந்த வாகனத்தில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் சமீபத்தில் திருப்பதிக்கு வந்த 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து நிபுணர்கள் அளித்த அறிக்கையின் படி, பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிக வெப்பம் அடைகிறது. இதனால் மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு முன்பு 30 நிமிடம் காரை நிறுத்தி அனைத்து வைக்க வேண்டும். எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். மலைப்பாதையில் செல்லும்போது காரில் உள்ள ஏசியை பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நியூட்ரலில் வாகனத்தை இயக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.