இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். பாலிவுட் ஸ்டைல் குயின் என அழைக்கப்படும் கரினா மீண்டும் ஒருமுறை தனது எளிமையான உடையில் மிகை  இல்லாத அழகை வெளிப்படுத்தியுள்ளார். இவரது தற்போதைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் வெள்ளை கலர் குர்தாவுடன், வைட் கலர் லெக் ஜீன்ஸ் அணிந்து மிகவும் எளிமையாக கம்ப்பேட்டபில் ஆன லுக்கில் உள்ளார். அவர் அணிந்திருந்த வெள்ளை குர்தா உடன் ஜோடியாக அணிந்த ஜீன்ஸ் மிகவும் கச்சிதமாக கேஷுவல் லுக் ஆக இருந்தாலும் அவரது மேக்கப் மிகையில்லாமல் இல்லாமல் இருந்தது.

லிப்ஸ்டிக் மற்றும் ஹேர் ஸ்டைல் ஆகியன அவரது லுக்கை பிரீமியமாக காட்டியது. அந்த லுக்கில் அவர் அணிந்திருந்த கைப்பையின் பிராண்ட் Bottega veneta பிரவுன் பிளாட்ஸ் மற்றும் பிளாக் சன் கிளாஸ் இதுவே இவரது லுக்கை நவீன மயமாக காட்டியது. அவர் அணிந்திருந்த கைப்பையின் விலை ரூபாய் 4.18 லட்சம் என கூறப்படுகிறது.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் ஸ்டைல் என்பது ட்ரெண்டை பின்பற்றுவது அல்ல. அது அமைப்பை பொருத்தது என்பதற்கு ஒரு உதாரணமாக கரீனாவின் இந்த லுக் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.