மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரில் பகுயாட்டி பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சாலையோரம் ஒரு சூட்கேஸ் கிடந்தது. இரவு நேரம் என்பதால் சூட்கேசை யாரும் கவனிக்கவில்லை.

இன்று காலை பேப்பர் போட சென்ற ஒருவர் சாலையோரம் கிடந்த சூட்கேசை பார்த்து சந்தேகம் அடைந்தார். உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூட்கேஸை திறந்து பார்த்தனர்.

அப்போது வாயில் பிரவுன் டேப் ஒட்டப்பட்ட நிலையில் சல்வார் கமீஸ் அணிந்த இளம் பெண்ணின் உடல் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த இளம்பெண்ணை யாராவது கொலை செய்து உடலை சூட்கேஸில் வைத்து சாலையோரம் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்கின்றனர்.