ராஜஸ்தானின் பிவாடி நகரம், கைர்தால்-திஜாரா மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவகத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு போலீசாருக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதற்குக் காரணம் , உணவகத்திற்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை தொடர்பான தகராறு  என கூறப்படுகிறது. இந்த மோதலில், போலீசார் உணவக ஊழியர்களை தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

 

இந்த வீடியோவை ஹோட்டல் உரிமையாளரின் அண்ணன் மகன் பதிவு செய்ய முயன்றபோது, போலீசார் அவரது மொபைலை பறித்து வீடியோவை நீக்கியதுடன், அவரை போலீஸ் ஜீப்பில் தூக்கிச் சென்று காவல் நிலையத்திலும் வைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பிவாடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து, ஐந்து போலீசார்களை இடைநீக்கம் செய்துள்ளார். வீடியோவில், போலீசார் கைபேசியைப் பறிக்கும் தருணமும், தாக்கப்பட்ட ஊழியர்களும் தெளிவாகப் பதிவாகியிருந்தன. மேலும் இந்த சம்பவம் அந்த