
பிரபல நடிகரான நெப்போலியனின் மகன் தனுஷ் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனுஷ் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலையில் முன்னேற்றம் அடைந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை தனுஷ் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் மையோபதி தசைத்திறன் மாறுபாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் டானியல் ராஜா திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் நெப்போலியன் மகன் தனுஷின் உடல் நலம் குறித்து சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனுஷும் அவரது மனைவி அக்ஷயாவும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்வதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.