
சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள சுலேசா கிராமத்தில் துலாராம் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பசந்தி பாய் என்ற மனைவி இருந்துள்ளார். இதில் துலாம் ராமுக்கு ஏற்கனவே 9 முறை திருமணமான நிலையில் பசந்தி பாய் பத்தாவது மனைவி.
இந்நிலையில் துலா ராமுக்கு திடீரென தன் பத்தாவது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அடிக்கடி தன் மனைவியின் மீது சந்தேகப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பசந்தி பாயுடன் துலாராம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் இருந்து சமையல் எண்ணெய், அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களை தன் மனைவி திருதி விட்டதாக துலாராம் சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தன் மனைவியுடன் சந்தேகப்பட்டு கோபத்தில் அடித்தே கொலை செய்துவிட்டார்.
பின்னர் ஒரு காட்டுப்பகுதிக்குள் தன் மனைவியின் உடலை வீசிவிட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததை எடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது தான் விவரம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து துலாராமை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.