
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 17 சுற்றுலாப் பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் தற்போது காஷ்மீரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாக ஸ்ரீநகர் விரைந்துள்ளார்.
அதன் பிறகு பிரதமர் மோடி சவுதி சென்றிருந்த நிலையில் தன்னுடைய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா விரைந்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த சமயத்தில் இப்படி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இவர்கள் சுற்றுலா பயணிகளை கொலை செய்வதற்கு முன்பு எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று கேட்டுவிட்டு முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்ததோடு ஆண்களை மட்டும் குறி வைத்தும் கொலை செய்துள்ளனர். தற்போது பயங்கரவாதிகளை அடக்குவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.