
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர், கர்நாடகா மாநிலம் ஷிவமொகா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த சம்பவத்திற்கு முன்பாக, அவரது மனைவியுடன் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இந்த வீடியோவில், “நான் மஞ்சுநாத், ஷிவமொகா, கர்நாடகாவிலிருந்து வந்துள்ளேன். நாங்கள் இந்த டூர் ‘இந்தியன் டிராவல் ஸ்டோர்’ மூலமாக புக்கிங் செய்தோம்” என அவர் மகிழ்ச்சியுடன் பேசுகிறார். அந்த வீடியோவில் அவரும், அவரது மனைவி பல்லவியும் ஷிகாரா பயணத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். “நேற்று நாங்கள் படகு வீட்டில் தங்கியிருந்தோம். மிகவும் அருமையான அனுபவம்,” என பல்லவி கூற, மஞ்சுநாத் அவர்கள் பதிலளிக்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரத்திற்குள், அந்த பயணத்தின் இரண்டாம் நாளில், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரச்சம்பவம் குறித்து பல்லவி இந்தியா டுடே ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். “நாங்கள் மூவரும் — நான், என் கணவர் மற்றும் என் மகன் — காஷ்மீர் பயணத்திற்கு சென்றிருந்தோம். சுமார் மதியம் 1.30 மணியளவில் தாக்குதல் நடந்தது. என் கணவர் என் கண்முன்னே உயிரிழந்தார். இன்னும் ஒரு கனவாகவே தோன்றுகிறது,” என கூறியுள்ளார்.
इस्लामिक आतंकियों द्वारा मारे गये, मंजूनाथ की आखिरी विडिओ 💔
पत्नी पल्लवी ने बताया “मैंने आतंकियों से कहा, मेरे पति को मार दिया, मुझे भी मार दो”
इस पर आतंकी बोले– “तुम्हें नहीं मारेंगे, जाओ मोदी को बता दो! 💔 pic.twitter.com/ZkXSkMLq6H
— Sudhir Mishra 🇮🇳 (@Sudhir_mish) April 22, 2025
தாக்குதலுக்குப் பிறகு, உள்ளூர் மக்கள் தாமாகவே நின்று உதவினர் என்றும், மூன்று பேர் தன்னைக் காப்பாற்றினார்கள் என்றும் பல்லவி கூறினார். மேலும், அந்த பயங்கரவாதிகள் ஹிந்துக்களைத் தாக்கவே குறிவைத்திருந்தனர் என்றும், அவர்களில் ஒருவன், “உன்னைக் கொல்ல மாட்டேன்… இதை மோடிக்கு சென்று சொல்,” என கூறியதாகவும் பல்லவி கண்கலங்க கூறியுள்ளார்.
தற்போது, அவரது கணவரின் உடல் உடனடியாக விமானம் மூலமாக ஷிவமொக்காவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என அரசு அமைப்புகளுக்கு பல்லவி வேண்டுகோள் விடுத்துள்ளார். “உடலை கீழே கொண்டுவர இயலவில்லை… விமானம் மூலமாக கொண்டு வரவேண்டும். உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்,” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த வீடியோவும், பல்லவியின் உருக்கமான பேட்டியும் சமூக வலைதளங்களில் பரவி, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.