
தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று வந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்ததோடு டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தவும் அனுமதி கொடுத்துள்ளது. மேலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இருப்பது போன்று தெரியவில்லை எனவும் இந்த சோதனை தேச நலனுக்கானது என்பதால் சோதனை நடத்த அனுமதி மறுக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.