திரிபுரா மாநில முதல்வராக இருக்கும் டாக்டர் மனிக் சாகா, தனது மருத்துவத் துறையில் கொண்ட அனுபவத்தால் மீண்டும் ஒரு முறை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு அரசு நிகழ்வில், ஏம்டாலி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை டாக்டர் ரத்னா சௌதுரி திடீரென மயங்கி விழுந்தார். அந்த நேரத்தில் மேடையில் இருந்த முதல்வர் சாகா, உடனடியாக தன்னை மருத்துவராக மாறிக்கொண்டு, உடனடியாக பல்சை பரிசோதித்து முதலுதவியை வழங்கியதுடன், மருத்துவ குழுவை அழைக்கச் செய்தார்.

முக்கியமான நிகழ்வின் நடுவே நடந்த இந்த திடீர் மருத்துவ அவசர நிலைமைக்கு முதல்வர் சாகாவின் செயல் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில், இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், முதல்வர் தன்னடக்கத்துடன் செயல்பட்டு, தனிப்பட்ட முறையில் ஆசிரியைக்கு ஆதரவு அளிப்பது தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

 

முதல்வர் சாகா, தனது அரசியல் வாழ்கையின் முன்னேர், ஹபனியாவிலுள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றியவராவார். தன்னுடைய மருத்துவத் தொழில் பழக்கத்தின் மூலம் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட அவசர நிலையை சிறப்பாக கையாள்ந்தது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவராலும் பாராட்டப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் அவரது செயலை பலரும் புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.