ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான The Resistance Front (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.