
அரியலூர் மாவட்டம் குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த 7-ஆம் தேதி திவ்யாவின் வீட்டிற்கு அருகில் இருக்கும் குப்பை தொட்டியில் ஆண் குழந்தை உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் திவ்யாவை பிடித்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது திவ்யாவின் வயிறு பெரிதாக இருந்துள்ளது. அது குறித்து மதிவண்ணன் கேட்ட போது வயிற்றில் கட்டி இருப்பதாக திவ்யா கூறியுள்ளார்.
அன்றைய தினமே வீட்டில் வைத்து திவ்யாவுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்தபோது அது வேறு யாருக்கும் பிறந்த குழந்தை என மதிவண்ணன் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த மதிவண்ணன் குழந்தையை தூக்கி வீசினார். அப்போது அடிபட்டு குழந்தை அளித்ததால் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா குழந்தையின் வாயில் துணியை திணைத்துள்ளார்.
இதனால் குழந்தை உயிரிழந்தது. பின்னர் கணவன் மனைவி இருவரும் குப்பை தொட்டியில் குழந்தையை போட்டு தீ வைத்தது தெய்ர்யவந்தது. இதனால் மதிவண்ணன், திவ்யா இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.