சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ளச லியாங்சாங் மாகாணத்தில் டோம்சாங் என்ற கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 8 ஆண்டுகளாக பொருளாதார பிரிவில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வு. இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் வு அவரது பெயர், வயது, வேலை மற்றும் குடும்ப வரலாற்றை பொய்யாக கூறி 10 கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் பேராசிரியர் வு வால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் வெளிக்கொண்டு வந்தார். அந்த மாணவி தனது சமூக வலைதள பதிவு ஒன்றில், வு தன்னை காதலிப்பதாக ஏமாற்றி கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும், இல்லையெனில் தனது தந்தையை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வு வின் பெற்றோர்கள் வேறொரு பணக்கார குடும்பத்தில் உள்ள பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என விரும்புவதால் அவர் தனது உண்மையான அடையாளங்களை குறிப்பிடாமல் பொய்யான அடையாளங்களுடன் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி இந்தப் பதிவை தொடர்ந்து பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில், வு வின் நடவடிக்கைகள் குறித்த உண்மை வெளிவந்ததால் அவரை ஆசிரியர் பணியில் இருந்து நீக்கியதோடு அவர் பணியாற்றி வந்த கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.