
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியான வாகா எல்லை மூடப்படும் என்று தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சொந்தங்களை இழந்து பல குடும்பங்கள் தீரா துயரில் தவிப்பது வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தின் போது வாகா எல்லை மூடப்படும் என்று அறிவித்துள்ளதோடு பாகிஸ்தான் நாட்டின் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேறவும் உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.