ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் வருகிற மே 1-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற  வேண்டும்.  பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரிஅறிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1-ஆம்  தேதிக்குள் இந்தியா திரும்ப  வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.