பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுடன் 1960-இல் கையெழுத்தான சிந்து நதி நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தது, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து வல்லுநர்கள் கூறியதாவது, தற்போது இந்தியாவில் அந்த குறிப்பிட்ட மேற்கு நதிகளை (இந்தஸ், ஜேலமும், செனாப்) முழுமையாக தடுத்து வைத்திருக்க போதுமான கட்டமைப்பு இல்லை.

இந்த 3 நதிகளிலிருந்து பாகிஸ்தான் தற்போது தனது மொத்த நீர் தேவையின் 80% நீரை பெற்று வருகிறது. இது அவர்களின் முக்கியமான விவசாய மாநிலங்களான பஞ்சாப், சிந்து பகுதிகளில் பயிர் வளர்ச்சிக்குத் தேவைப்படும் நீரின் முக்கிய ஆதாரமாகும்.

விவசாயம் மட்டும் பாகிஸ்தானின் வருவாயில் 25% பங்களிக்கிறது என்பதால், இந்த நீர் தடை உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

எனினும், இந்தியா தற்போது இந்த நீரை முற்றிலும் தடுக்கக்கூடிய நிலை இல்லை. அதனால், இந்த நடவடிக்கை பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுக்கும் உத்தியாக பார்க்கப்படுகிறது.

நீர் ஓட்டத்தை தடுக்கும் அணைகள் போன்ற பெரிய திட்டங்களை உருவாக்க பல ஆண்டுகள் மற்றும் பெரும் நிதி தேவைப்படும். எனவே, இது ஒரு நீண்டகால நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது

இந்த நிலையிலி பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியா நீரை போர் ஆயுதமாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டி வருகின்றனர்.