ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தளத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிரவாதிகளை கண்டறியும் முயற்சியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் தான் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பாகிஸ்தானுடன் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததோடு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதோடு விசாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கராச்சி கடற்கரையில் ஏவுகணை சோதனை செய்ய பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதால் அங்கு விறுவிறுப்பாக சோதனைகள் நடைபெறுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு பதிலடியாக தற்போது இந்தியாவும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டின நிலையில் இலக்கை துல்லியமாக குறி வைத்து தாக்கும் ஏவுகணைகளின் வீடியோ வைரலாகியுள்ளது. மேலும் பாகிஸ்தான் ஏவுகணை சாதனை செய்வதால் போருக்கு தயாராகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதால் தற்போது இந்தியாவும் பதிலடியாக ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது.