அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.

இதில் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் சென்னை நீதிமன்றத்தில் கே சி பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

அதன் பின் இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு எதிராக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரியும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி இந்த மனு விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலகளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.