இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. குறிப்பாக எந்த இடத்தில் ஒரு பிரச்சினை நடந்தாலும் உடனே அதனை சுற்றி இருப்பவர்கள் தடுக்க முயல்கிறார்களோ இல்லையோ அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட தவறுவது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது மும்பையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் ஒருவர் காரை நிறுத்தி வைத்திருந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Lokmat Mumbai (@lokmatmumbai)

அப்போது பேருந்து நடத்துனர் ஒருவர் காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறிய நிலையில் கார் ஓட்டுநர் கோபத்தில் அந்த நடத்துனரை கண் மூடித்தனமாக அடிக்கிறார். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட அது மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் இது போன்று  பொது இடங்களில் தகாத முறைகளில் ஈடுபடுவது மிகவும் வருத்தமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் அந்த கார் ஓட்டுனரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.