தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் எஸ்ஏ சந்திரசேகர். இவருடைய மனைவி ஷோபா. இவர் பாடகியும் கூட. இவர்களின் மகன்தான் பிரபல நடிகர் விஜய். இவர் அவ்வப்போது தன்னுடைய மகனின் கட்சி விழாக்களில் மனைவியுடன் கலந்து கொள்ளும்  நிலையில் தன் மகனைப் பற்றி தொலைக்காட்சிகளுக்கு சுவாரசிய பேட்டிகளையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் தங்களுடைய 52-வது திருமண நாளை கேக் வெட்டி மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

 

திருமண நாளை முன்னிட்டு தன்னுடைய மனைவிக்கு புதிதாக bmw காரினை சந்திரசேகர் பரிசாக வழங்கியுள்ளார். இதனை சோரூமில் இருந்து வாங்கி ஓப்பன் செய்யும் வீடியோவை தற்போது x பக்கத்தில் வெளியிட  மிகவும் வைரலாகி வருகிறது. இந்த காரை வாங்கிய பிறகு சந்திரசேகர் மற்றும் சோபா இருவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இந்த காரின் விலை 75 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.