விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் மணிகண்டன் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை மணிகண்டன் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் கோபத்தில் மணிகண்டன் மூதாட்டியின் கழுத்தை சேலையால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 14,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.