
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவரும், அதிமுக முக்கிய நிர்வாகியுமான சந்திரசேகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த சில நாள்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது மரணம் அதிமுக வட்டாரத்தில் பெரிய அதிர்வலை உருவாக்கியுள்ளது.
சந்திரசேகரின் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல முக்கிய தலைவர்கள் அவரது வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.