
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஷ்ரவன் ராணா, சிகிச்சையின் போது மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, அந்த கொடூரமான சம்பவம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஷ்ரவன் ராணா என்பவர் 10 வயது அப்பாவி சிறுமி தனியாக இருப்பதைக் கண்டுபிடித்து, அவள் வாயில் துணியை திணித்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஷ்ரவன் ராணாவை கையும் களவுமாகப் பிடித்தனர். இச்சம்பவத்தால் கோபமடைந்த மக்கள் ஷ்ரவன் ராணாவை அடித்துள்ளனர். இதனால் அவர் பலத்த காயமடைந்தார்.
⚠️ Trigger Warning: Sensitive Video⚠️
UP: जिला हापुड़ में रेप के आरोपी श्रवण राणा की अस्पताल में मौत हुई। आरोप है कि 10 अप्रैल को श्रवण ने 10 साल की बच्ची के मुंह में कपड़ा ठूंसकर रेप किया। लोगों ने उसको रंगे हाथ पकड़ा और खूब पिटाई की। 17 अप्रैल से उसका इलाज मेरठ में चल रहा था। pic.twitter.com/55lV6Q744S
— Sachin Gupta (@SachinGuptaUP) April 24, 2025
“>
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பலத்த காயமடைந்த ஷ்ரவன் ராணா மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு, காவல்துறை சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. ஒரு அப்பாவி சிறுமியை இத்தகைய கொடூரத்திற்கு ஆளாக்கிய, குற்றம் சாட்டப்பட்டவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.