இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் அதிர்ச்சிகரமானதாகவும் நகைச்சுவை கலந்தும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போதும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு இடத்தில் நாடக நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் அந்த நாடக நிகழ்ச்சியை அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோது சிவனும் பார்வதியும் பக்தி பரவசத்தோடு நடனம் ஆடுகிறார்கள்.

அவர்கள் நடனமாடும் போதே திடீரென கையைப் பிடித்துக் கொண்டே அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டனர். ஒரு நிமிடம் என்னவென்று புரியாமல் பார்த்தபோதுதான் அங்கிருந்து மாடுகள் ஓடி வருவது தெரிய வந்தது. 2 மாடுகள் வந்த வேகத்தில் அங்கிருந்த மேடைகளை தகர்த்து எறிந்ததோடு பொதுமக்கள் மீதும் பாய்ந்தது. பின்னர் அந்த மாடுகள் தானாகவே அங்கிருந்த அமைதியாக சென்றுவிட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.