
உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் இடம்பெற்ற விசித்திரமான காதல் மற்றும் திருமண விவகாரம் தற்போது உள்ளூர் மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான நான்கு குழந்தைகளின் தாய் இந்திராவதி, தனது உறவினரான 25 வயது பேரனுடன் காதலில் இருந்து, கோவிந்த் சாஹேப் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது அந்தப் பெண்ணின் மூன்றாவது திருமணமாகும். இந்த சம்பவம் கிராமத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
பிரதாப்பூர் பெல்வாரியா பகுதியைச் சேர்ந்த இந்திராவதி, தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகர் ஆசாத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். அதே சந்திரசேகரை 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்திராவதி இரண்டாவது முறையாகத் திருமணம் செய்திருந்ததோடு, அவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். அதாவது அவருடைய இரண்டாவது கணவரான சந்திரசேகர் தன் மனைவியின் முதல் கணவனுக்கு பிறந்த மகளை அவரே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.
இதனால் சில ஆண்டுகளாக சந்திரசேகருடன் திருமண வாழ்வில் ஏமாற்றமடைந்த இந்திராவதி, தனது உறவினரான பேரனுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த நெருக்கம் காதலாக மாறி, இருவரும் திருமணமாக முடிந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றிய தகவல் லஹ்தோர்வா காவல் நிலையம் வரை சென்றுள்ளதுடன், இருவரும் திருமணம் செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் குடும்பத்தினர் மற்றும் தலித் சமுதாயத்தினர் இருவரையும் சமூகத்தில் இருந்து புறக்கணிக்க முடிவுசெய்துள்ளனர். இதற்கிடையில், இந்திராவதியின் கணவர் சந்திரசேகர், தனது மனைவியும், அவரது காதலனும் சேர்ந்து, தன்னை மற்றும் தனது மூன்று பிள்ளைகளை விஷம் கொடுத்து கொல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது காவல் துறையினரின் கவனத்திற்குள்ளாகியுள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.