இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமானதாகவும் திகிலூட்டும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது வீட்டில் அமர்ந்து ஒரு சிறுவன் வாசல் ஓரமாக ஒரு கட்டிலில் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறான். செல்போனில் சார்ஜ் போட்டபடியே அந்த சிறுவன் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வீட்டுக்குள் ஒரு சிறுத்தை ஒன்று அசால்டாக நுழைந்தது. அந்த சிறுத்தை சிறுவனை கவனிக்காமல் வீட்டிற்குள் சென்ற நிலையில் இதனை பார்த்து சிறுவன் உடனடியாக போனை வைத்துவிட்டு நைசாக கதவை மூடிவிட்டு வெளியே சென்று விட்டான்.

பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து சிறுத்தையை பத்திரமாக பிடித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சிறுவனின் துணிச்சலை பலரும் பாராட்டுகிறார்கள். அதே நேரத்தில் சிறுவன் சார்ஜ் போட்டபடி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டிக்கிறார்கள். மேலும் சிறுவன் அந்த சிறுத்தையை பார்த்ததும் பயப்படாமல் கத்தி கூச்சலிடாமல் புத்திசாலித்தனமாக கதவை பூட்டிக்கொண்டு வெளியே சென்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.