பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ராபிடோ இருசக்கர வாகன சேவையின் ஓட்டுநர் ஒருவர் பெண்மீது தவறான ஆசை வார்த்தை மற்றும் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதால் பரபரப்பாகி வருகிறது.

இதில், தனது மனைவிக்கு அனுப்பப்பட்ட மோசமான மெசேஜ்களை கணவர் நேரில் வாசித்து, அந்த ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மனைவி ராபிடோ மூலமாக ஒரு ரைடு புக் செய்திருந்த நிலையில், ஓட்டுநர் அவரது மொபைலுக்கு “நான் பில்டிங்க் வெளியே இருக்கேன், பிளாட் நம்பர் கொடு, மேல வர்றேன்.

 

இது என் நம்பர், அழைக்கவும்” என ஆபாசமாக  மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், அந்த ஓட்டுநரை நேரில் சந்தித்து, அவரிடம் பேசும் விடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், ராபிடோ நிறுவனத்தையும் டேக் செய்து, “உங்கள் ஒப்பந்த ஓட்டுநர் வேறு ஒருவரின் ஐடியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா? இதற்கு உங்கள் பொறுப்பு என்ன?” எனக் கேட்டுள்ளார்.

இந்த சம்பவம், பெண்கள் தனியாகவும் நள்ளிரவில் கூட பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலையை வெளிக்கொணர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் பல பெண்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராபிடோ நிறுவனத்திடம் இந்த வழக்கை முறையாக விசாரித்து, பாதுகாப்பு நடைமுறைகளை தெளிவாக விளக்கி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.