வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வருகிற மே 11ஆம் தேதி சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி மாநாட்டிற்கு வரும் வாகன விவரங்களை டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு மாவட்ட வாகனங்களுக்கும் பல்வேறு நிறங்களில் அனுமதி அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

அந்த அனுமதி அட்டையை வாகனங்களில் ஒட்டி இருந்தால் மட்டுமே மாநாட்டிற்கு வர அனுமதி வழங்கப்படும். இருசக்கர வாகனங்களில் மாநாட்டிற்கு வர அனுமதி கிடையாது. இந்த மாநாட்டை இரவு 10 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.