சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் பகுதியில் உள்ள சின்ன அக்ரகாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான செந்தில்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சண்முகப்பிரியா (33) என்ற மனைவி இருக்கிறார்.

இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் சண்முகப்பிரியா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு 8-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இந்த பெண் கர்ப்பமாக இருக்கும் போது பதிவு செய்யாமல் இருந்ததோடு தடுப்பூசி எதுவும் போடவில்லை.

இது தொடர்பாக கிராம மக்கள் கொடுத்த தகவலின் படி சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவருடைய உடல்நிலை மோசமானதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு பெண் 8 குழந்தைகளை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே சமயத்தில் 7 பெண் குழந்தைகளுக்கு பிறகு அவர்களுக்கு எட்டாவது ஆக ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.